Friday, September 13, 2019

மருந்து இல்லாமல் வலி நீக்கும் மருத்துவம்
http://www.maalaimalar.com/health/generalmedicine/2019/09/09130237/1260391/pisiyo-therapy-treatment.vpf

 செப்டம்பர் 8-ந்தேதி உலக பிசியோதெரபி தினம்.

வளர்ந்து வரும் மருத்துவ துறையில் பிசியோதெரபி மருத்துவம் கடந்த சில வருடமாக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து நம் மனித குலத்தை அச்சுறுத்தும் நோய்கள் மனிதன் வாழும் சூழ்நிலைகளை பாதித்தாலும் ஒவ்வொரு மருத்துவ துறைகளும் அதனதன் தனிப்பட்ட முறைகளில் சிறப்பானது. அதுபோல் பிசியோதெரபி மருத்துவ முறை தனிப்பட்ட வழிமுறைகளை கொண்டு உடலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை சரி செய்யவும், கட்டுப்படுத்தவும் கண்டறியப்பட்ட ஒன்றாகும். ஆங்கில மருத்துவத்தின் சிறப்பு பிரிவாக செயலாற்றி வளர்ந்து அதன் வெற்றி பாதையில் பயணித்து வருகிறது.

மூட்டு வலி, தசை வலி, முதுகு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, தோள்பட்டை வலி, தசை பிடிப்பு, கழுத்துவலி, மூட்டுத் தேய்மானம் போன்ற பிரச்சினைகளை மாத்திரையின் தேவையில்லாமல் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் தனிப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட முறைகளை கொண்ட மருத்துவ முறைகளை கொண்டு குணப்படுத்திட கண்டறியப்பட்டதே பிசியோதெரபி மருத்துவமாகும். இது ஆங்கில மருத்துவத்தின் ஒரு சிறப்பு பிரிவேயாகும்.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியோடு தன்னையும் இணைத்து கொண்டு பிசியோதெரபி மருத்துவம் மென்மேலும் வளர்ந்து வருகிறது. வலியை போக்க மாத்திரைகள் பல்வேறு கண்டறியப்பட்டாலும் பல்வேறு பக்க விளைவுகளை உடலில் விதைத்து விட்டே செல்லும், அனைவருக்கும் தெரிந்த பக்க விளைவு வயிற்று எரிச்சல் மற்றும் புண் போன்றவை. பிசியோதெரபி மருத்துவ முறை இது போன்ற எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தி தகுந்த வலி நிவாரணியாக சமீபகாலங்களில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் முறையாக படித்து தகுதி பெற்ற மருத்துவர்களை கொண்டு சிகிச்சை பெறும் போது இதன் மகத்துவத்தை இன்னும் செவ்வனே உணரலாம். வலி நிவாரணத்தோடு நின்று விடாமல் மூளை ரத்த அழுத்தம் பாதிப்பால் ஏற்படும் பக்கவாதம், மூளை வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள், விளையாட்டின் போது ஏற்படும் காயங்கள், எலும்பு முறிவுக்கு பின் மூட்டு இறுகி போதல் பல்வேறு பிரச்சினைகளை உடற்பயிற்சி மூலமும், சில இதற்கெனவே வடிவமைக்கப்பட்ட சிறப்பான உபகரணங்களைகொண்டு அளிக்கும் பிசியோதெரபி மருத்துவத்தின் மூலம் சரிபடுத்தி கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் நூறு சதவீத உடல் ஊனத்தை குறைத்து வெற்றிகரமாக யாருடைய உதவியும் இல்லாமல் வாழ வழிச்செய்திட உதவும் உன்னத பிசியோதெரபி மருத்துவம்.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, தோல்பட்டை வலி, மூட்டு தேய்மானம், குதிகால் வலி இது போன்ற மற்ற மருத்துவத்தில் சரி செய்ய முடியாதவற்றை உடற்பயிற்சி, சுடுநீர் ஒத்தடம், மின்சார சிகிச்சை, குளிர்ந்த நீர் ஒத்தடம், லேசர் சிகிச்சை இன்னும் சில மருத்துவ உபகரணங்களையும் பிசியோதெரபி மருத்துவர்களால் கைகளை கொண்டு செய்யும் இது போன்ற சிகிச்சைகளை கொண்டு நிரந்தர தீர்வு த ரமுடியும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இடுப்புமூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பின் ஏற்படும் வலிகளையும் பிசியோதெரபி சிகிச்சைகள் மூலம் சரி செய்து கொண்டு மீண்டும் பழைய வாழ்க்கையை அடைய முடியும். இது மட்டும் அல்லாமல் விளையாட்டின் போது ஏற்படும் காயங்கள், ஜவ்வு காயங்கள், கிழிதல் போன்ற பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு உண்டு.

இதைபோல பெண்களுக்கு மாத விலக்கு பிரச்சினைகளின் போது ஏற்படும் முதுகு வலி போன்ற பிரச்சினைகளை பிசியோதெரபி சிகிச்சை மூலம் நிரந்தர தீர்வு காண முடியும். அதே போல் முதியவர்களுக்கு ஏற்படும் எலும்பு சிதைவு நோயினால் ஏற்படும் மூட்டுவலி, முதுகுவலி,தோல் பட்டை வலி, கழுத்துவலி போன்ற வலிகளை சிறு சிறு உடற்பயிற்சிகள் மூலம் பிசியோதெரபி மருத்துவர்களின் அறிவுரைகளின் மூலம் எளிதில் சரிசெய்யமுடியும்.

நவீன மருத்துவத்தின் ஒரு பகுதியான பிசியோதெரபி மருத்துவம் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறது. உலக பிசியோதெரபி மருத்துவர்கள் பெருமன்றம் 1951-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந்தேதி உருவாக்கப்பட்டது. அதன் நினைவாக 1996-ம் வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 8-ந்தேதி உலகத்தில் உள்ள அனைத்து தரப்பு மருத்துவர்களும் இந்த நாளை உலக பிசியோதெரபி மருத்துவர்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். உலகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பக்கவிளைவுகள் இல்லாத பிசியோதெரபி மருத்துவம் சென்று சேரும் வண்ணம் இந்த வருடம்நாள்பட்ட வலியை அதாவது நாள்பட்ட முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, குதிகால் வலி போன்ற வலிகளை பிசியோதெரபி மருத்துவம் கையாள்கிறது.

http://www.maalaimalar.com/health/generalmedicine/2019/09/09130237/1260391/pisiyo-therapy-treatment.vpf

செந்தில்குமார் தியாகராஜன், பிசியோதெரபி மருத்துவர்,
 Excel college of physiotherapy & Research Centre,
 கல்லூரி விரிவுரையாளர்,
குமாரபாளையம்.
8344486421
Sai Physio Care & Cure

நாமும் அறிவோம் பிசியோதெரபி(Physiotherapy book in Tamil)

  முன்னுரை  பிசியோதெரபி மருத்துவம் நவீன மருத்துவத்தின் ஒரு பகுதியாகும், இந்த புத்தகத்தில் கழுத்து வலி, முதுகு வலி, தொலைபேசி பயன்பாட்டால் ஏற்...